44 நாடுகளில் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது என WHO தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பரவலாக காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், உலக அளவில் 44 நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 4500 மாதிரிகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர்த்து இந்தியாவில் […]
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி. உலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ பயன்பாடு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவில் WHO வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, […]
உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பல நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி […]
கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டாக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தனது ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மட்டுமல்லாமல் பல புதிய கட்டுப்பாடுகளை […]
வட கொரியாவில் ஒருவருர் கூட கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் கொரொனோ வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.வைரஸின் தாக்குதலுக்கு பலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் வடகொரியாவானது தங்கள் நாட்டில் எவருக்கும் கொரொனோ தொற்று பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. எனினும், கொரொனோ வைரஸானது ஆரம்பத்தில் சீனாவில் இருந்து பரவியதால் அதன் நட்பு நாடான வடகொரியாவிலும் அதன் தாக்கம் தற்போது வரை இருக்கலாம் […]
பூனைகள் மூலம் கூட மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம். கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் ஆனது பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் ஆனது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தடுப்பு […]
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம். கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று […]
பதஞ்சலியின் கொரோனில் எனும் ஆயுர்வேத மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிபர் பாபா ராம் தேவ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார மையத்தின் மருத்துவ கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு […]
அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பைசர் – பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மட்டுமே அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு, இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உலக சுகாதார […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்த உலகளவில் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு […]
நார்வேயில் ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற சிறிது நேரத்தில் 29 வயதான நோயாளிகள் இறந்த பின்னர், உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசி இறப்புகளுக்கு பங்களித்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான WHO உலகளாவிய ஆலோசனைக் குழு நேற்று ஒரு அறிக்கையில் கூறுகையில், தடுப்பூசியின் ஆபத்து-நன்மை சமநிலை வயதானவர்களுக்கு சாதகமாக உள்ளது. தடுப்பூசி பெற்ற பின்னர் மிகவும் நோய்வாய்ப்பட்ட வயதான சிலர் இறந்துவிட்டதாக வெளியான செய்திகளை மறுஆய்வு செய்ய குழு […]
கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்லவிருந்த மருத்துவ நிபுணர்களை அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடம் சீனவாக இருக்கும் நிலையில், இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை WHO ஏற்படுத்தியது. 10 பேர் கொண்ட அந்த குழு இம்மாத தொடக்கத்தில் சீனாவின் உகான் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால், சீனாவிடம் […]
இதுவரை உலகில் குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாது, உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கி பத்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த வைரஸின் வீரியம் குறைந்த பாடில்லை. இந்த பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, […]
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து உள்ளன. ஆக்ஸ்போர்டு […]
கொரோனா பரவிவரும் சூழலில், ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் […]
கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையெனவும், கொரோனாவை தடுக்க அதிகம் செலவிடுவதை தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. […]
அனைத்தும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை மருத்துவர் மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி உள்ள நிலையில், இதன் பரவும் வேகம் 70% அதிகமானது என்றும், இந்த வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் […]
கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? எப்படி உருவானது? உள்ளிட்டவை குறித்து சீனாவில் உலக சுகாதார அமைப்பு அடுத்தாண்டு ஆய்வு நடத்தவுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பல நாடுகளில் பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், சில நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை பரவத்தொடங்கியது. இதனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, […]
2021 தொடக்கத்திலிருந்தே ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்லும் நிலையில், உலகின் பல நடுகல் கடந்த சில மாதங்களாக இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகளை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பல ஆய்வுகளின் முடிவுகள் வெற்றி பெற்றிருந்தாலும், முழுவதுமாக வெற்றியடைந்த தரமான தடுப்பூசி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், […]