உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் நோய் மிகவும் தீவிரமான நோயாகும், இது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை உள்ளது. இது மேற்கு ஆபிரிக்காவில் மார்பர்க்கின் இரண்டாவது அலை ஆகும். முதன்முதலில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. கடந்த மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கானா, தெற்கு அஷாந்தி பிராந்தியத்தில் இரண்டு நபர்களிடமிருந்து கொடிய மார்பர்க் வைரஸின் தாக்கம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் […]
குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு (WHN). கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் (Monkeypox) என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான குரங்கு பாக்ஸ் வழக்குகள் தோன்றியுள்ளதாகவும்,இந்த […]
ஐரோப்பாவில் 100 நபர்களுக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை என்று உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி […]
அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான […]
ஏற்கனவே உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரு வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளும் அங்கங்கு கண்டறியப்பட்டு மக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஓமைக்ரானின் BA.1, BA.2, BA.1.1, A.3 ஆகிய மாறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுதும் ஓமைக்ரான் வைரஸின் புதிய இரு மாறுபாடுகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.4 மற்றும் BA.5 மாறுபாடுகளாகிய இந்த புதிய […]
நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்: இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார […]
ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வருத்தி வரும் நிலையில், தற்பொழுது புதிது புதிதாக நோய்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிகா மற்றும் டெங்கு ஆகிய பூச்சிகளால் பரவக்கூடிய நோய் கிருமிகள் அடுத்த தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதாவது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியில் வாழக்கூடிய 4 பில்லியன் மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல். கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாற்றியமைத்தது. அதன்படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காற்று மாசு குறித்து ஆய்வு உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது […]
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோன தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா குறித்த தவறான தகவல்கள் கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் அவர்கள் கொரோனா பரவல் […]
ஓமைக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமைக்ரான் வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ஓமிக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக உச்சத்தில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் […]
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல […]
புகையிலை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஊக்கமளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகிப்பவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடந்த 2015 ஆம் ஆண்டு 1.32 மில்லியனாக இருந்த புகையிலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, தற்போது 1.30 ஆக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 1.27 பில்லியன் ஆக குறையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் […]
உலகில் ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது என WHO தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஐரோப்பாவில் தான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், உலக அளவில் சுமார் 3.1 மில்லியன் கொரோனா வழக்குகள் இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது என WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்பொழுது இந்தியாவில் குறைந்துள்ளதாகவும், வரப்போகும் மாதங்களில் இன்னும் கவனமுடன் கொரோனா பரவலை கையாள வேண்டும் எனவும், அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா போலியோ ஒழிப்பு மற்றும் வேறு சில நோய்களுக்கும் தடுப்பூசி […]
தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 81 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து […]
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த 14-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சிலர் முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் எனவும் சிலர் 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என […]
பெண்களின் கன்னித்தன்மையை சரி செய்யும் முறைக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை. கன்னித்தன்மை சோதனை பெறுவதற்கான பிரச்சினை மீண்டும் வேகத்தை பெறத் தொடங்கியுள்ளது. இந்த முறைக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மையில் இங்குள்ள மருத்துவர்கள் “கன்னித்தன்மை சரி செய்யும்” (virginity repair) என்ற பெயரில் போலி செயல்பாடுகளை நிறுத்தாதவரை கன்னித்தன்மை சோதனை செய்வதில் எந்த பயனும் இல்லை என்று கூறினர். ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி […]