தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது என டிடிவி தினகரன் கருத்து. அதிமுக ஆட்சியின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட நிலையில், இதனை குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் வெள்ளை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் […]
கொடுத்த வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என தெரிவித்தார். இதுபோன்று ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார். திமுக வெளியிட்டுள்ள […]
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. தமிழக்தில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் […]
பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.12ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.31.50-ஐ மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 50 பைசாவை மட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கிறது என குற்றசாட்டியுள்ளார். மேலும், முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை […]
ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்! ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை, கார்ப்பரேட் நிறுவனம், செல்வந்தர்கள் தான் பயனடைகின்றனர். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது என தெரிவித்தார். வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளது என குறிப்பிட்டார். சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து அவருகிறார். அப்போது, 2011-16ல் அதிமுக ஆட்சியில் […]