மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தன. அதாவது, மதரிஹட் என்கிற தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், எ.ஜி.கர் மருத்துவ மாணவி கொலை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலமரசுக்கு எதிராக இருந்தும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது. […]