திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் […]