தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை. இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் […]