திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் நேற்றிரவு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]