அடுத்த 3 மணிநேரத்தில் இந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல். வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இன்றும், நாளையும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, […]
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான […]
நிவர் புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி வடக்கே பலத்த சூறைக்காற்றுடன் மையப்பகுதியை கடந்து வருகிறது. புதுச்சேரி 20 கி.மீ.., சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் புயலானது கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடந்து வருவதால் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் கரையை கடக்க மேலும் 3 முதல் 4 மணிநேரம் ஆகும் என்று […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும், அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,கனமழை தொடர்பாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.எனவே தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் […]
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடங்கி இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் தஞ்சை, நாஞ்சிக்கோட்டை, பள்ளியக்ரஹாரம், கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுள்ளது. கடந்த இந்நிலையில் சில வாரங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களையும் விவசாயிகளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. DINASUVADU