சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் தீவிரமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், கடந்த 7 மணி நேரமாக இது சென்னை, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இது நாளை அதிகாலை (17-10-2024) புதுச்சேரி-நெல்லூருக்கு இடையில் கரையை கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]
நிவார் புயல் எதிரொலியால் மரங்களை மக்கள் மரங்களை வெட்டுவதால், மரங்களை வெட்ட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவார் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு […]
தொடர்மழையானது விட்டுவிட்டு, கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற […]