தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடைவதையடுத்து, 2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய தீபகற்பமானது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவகாலங்களைக் கொண்டது. இந்த சமயத்தில் தான் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வாரத் தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்தது. செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் உள்ளது. ஆனால் […]