கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அதன்படி, மீண்டும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு […]
மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை […]
கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தலில் உட்பட்ட கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில், நோயாளிகள் எப்போதும் மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நோயாளிகள் 8 மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர் ஈரப்பதமாக […]
தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி இருந்து 24ம் தேதி வரை தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 24,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் இருந்ததாக 17,398 வழக்குகள் பதிவாகியுள்ளன.