தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரையுலக பிரபலங்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தமிழில் பல திரைப்படங்களில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். பின் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின், ஹிந்தி திரையுலகிலும் பிரபலமானார். இந்நிலையில், கடந்த வருடம், துபாய் சென்றிருந்த போது அவர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், சிங்காப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம், சில முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு மெழுகு சிலைகளை வடித்துள்ளது. […]