Tag: WaterScarcity

10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் -அமைச்சர் வேலுமணி

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.சட்டப்பேரவையில் குடிநீர்  பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.அதில்,  தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார்.ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் வேலுமணி விளக்கம் […]

#Chennai 2 Min Read
Default Image

தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை – திருமாவளவன்

தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை திருமாவளவன்  சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை மத்திய அரசு தீர்க்க வேண்டும் .தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை. தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை- அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் ஏற்பட்டுள்ள  குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்று அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு ஏரிகளை குடிநீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  

#ADMK 2 Min Read
Default Image

தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம். தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை.பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்தால் உடனே சரிசெய்யப்படும். 2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே […]

#ADMK 2 Min Read
Default Image

குடிநீர் தட்டுப்பாடு : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த  கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

#ADMK 2 Min Read
Default Image