மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. நீர்வளம், வருவாய், பொதுப் பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். பல்வேறு […]