பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர். நெல்லை மேலப்பாளையத்தில் அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கடந்த 1986ஆம் ஆண்டு, இவர் தனக்கு சொந்தமான சேவியர் காலனி என்ற இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இழப்பீடு தொகையை கொடுத்து எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்று அதிகாலை சேவியர் காலனி உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஏறி, தனது இடத்திற்கு மூன்று மடங்கு இழப்பீடு தொகையை […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அரைப்பட்டி ஊராட்சியில் தேர்தலில் சிங்காரம் என்பவர் தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை சென்று […]