ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணையை இன்று முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 7,776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. […]