வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார். பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய […]