இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைபிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோலி , பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அணி விளையாடவுள்ளது.இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழு : ஷிகர் தவான், ராகுல், […]