ரஷ்யா_வுடன் போடப்பட்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க – ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுதங்களைக் கொண்டு இரெண்டு நாடுகளும் தாக்குதல் நடத்த தடை விதிக்கும் விதமாக 1987 ஆம் ஆண்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க திடிரென அறிவித்திருக்கிறது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறுகையில் ஆறு மாதத்தில் ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலும் வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கான மீண்டும் கடைசி வாய்ப்பு என்று […]
தென் அமெரிக்கா , சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். தற்போது புதியவகையான ஆட்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தென் அமெரிக்கா , சிலி , அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் நாயின் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் […]
சிரியாவில் குருது படைகளை தாக்கினால் பொருளாதார பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக குருது படையுடன் இணைந்தது அமெரிக்கா சண்டையிட்டு வருகின்றது .ஆனால் துருக்கி அரசு குருது படைகளை பயங்கரவாதிகளாக கருதி பதில் தாக்குதல்களை நடத்தி வந்தது.குருது படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால் ஆத்திரம் அடைந்துள்ள துருக்கி அதிபர் அட்டோகன் தைப் அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். இதையடுத்து சிரியாவில் இருந்த அமெரிக்கா படைகளை அமெரிக்கா திருப்ப […]
பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணியாற்றும் சக காவல் அதிகாரிகள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பரபரப்பு புகார் கூறினர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் , சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் மறுக்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.