தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடிக்கும் தண்ணீர் நிரம்பியது. தற்பொழுது, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
ஆயுர்வேத உணவு என்பது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவிக்கிறது. இருப்பினும் ஆயுர்வேத உணவுக் கலவைகளில் சில நமது உடலில் தீங்கு விளைவிக்கும் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. ஆயுர்வேதத்தின் படி, உங்களை நோய்வாய்ப்படுத்தும் சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அந்த உணவுக் கலவைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. வாழைப்பழம் மற்றும் பால்: […]
விஞ்ஞானிகள் முன்பு நினைத்ததை விட புவி வெப்பமடைதல் மிக வேகமாக இமயமலை பனிப்பாறைகளின் உருகுவதை துரிதப்படுத்துகிறது. பாக்கிஸ்தானில் இதன் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் விளைநிலங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து, 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. இந்த வெள்ளத்தில் இதுவரை 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான வெள்ளம், கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். திபெத்தில் தொடங்கி பாக்கிஸ்தான் வழியாகப் பாய்ந்து கராச்சிக்கு அருகில் அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதிப் படுகை, […]
சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, பேக்கின் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள் மற்றும் படங்கள் பயன்படுத்தப்படும்: புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது என பேக்கின் ஒரு பக்கத்தில் படத்துடன் பயன்படுத்தப்படும் மற்றும் புகையிலை பயனர்கள் வாழ்நாள் குறைவது போல மறுபுறம் படத்துடன் காட்சிக்கு வைக்கப்படும். இந்த பேக்குகளில், […]
கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் […]
ட்ரினிக் (Drinik)என்ற புதிய ஆண்ட்ராய்டு மால்வேர் பயனர்களின் மொபைல் வங்கி தரவு,பணத்தை திருடுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் பயனர்களைக் குறிவைத்து வங்கி தகவல்கள் மற்றும் பயனர் தகவல்களை திருட சைபர் குற்றவாளிகளால் ஒரு புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கணினி அவசர மறுமொழி குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இக்குழு தீம்பொருள் செயல்படும் விதம் குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி, புதிய மொபைல் […]
மனித செயல்பாட்டினால்,புவியின் சராசரி வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியசை விரைவில் எட்டிவிடும் என ஐபிசிசி எச்சரித்துள்ளது. உலக நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல்பூர்வமான தகவல்களை அளிக்கும் ஐபிசிசி (அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்றத்திற்கான குழு) ‘பருவநிலை மாற்றம் 2021’ என்னும் தலைப்பில் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.இதற்கு முன்னர்,2014-ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம் என்று தெரிவித்தது. அதில், அனைத்து நாடுகளும் தங்களது (கிரீன்ஹவுஸ் […]
அதிதீவிர யாஸ் புயல் கரை கடக்க தொடங்கியது இதனால் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் இன்று கரையை கடக்க தொடங்கியது. தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் யாஷ் புயல் ஒடிசா-மேற்குவங்கம் […]
யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல் கரையைக் […]
யாஷ் புயல் நாளை கரைய கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் பரவலாக கன […]
யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. பின்னர், நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஒரிசா – மேற்கு வங்கத்துக்கும் இடையே […]
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள யாஸ் புயல் வரும் 26ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும். யாஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் நாளை வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பின் வருகின்ற 26ஆம் தேதி ஒடிசா […]
ஒடிசாவில் கடலோர மாவட்டங்களுக்கு உயர் கட்ட புயல் எச்சரிக்கை… அனைத்து மீட்பு பணிகளும் தயார்நிலை. ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை தாக்தே எனும் ஒரு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது, இதனையடுத்து யாஸ் புயல் ஒடிசாவில் உருவாகியுள்ளது, மேலும் ஒடிசாவில் மே 26 ம் தேதி யாஸ் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உயர் கட்ட புயல் எச்சரிக்கையை […]
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைத்ததாக இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் ராஜமவுலி திரைபடைப்பில் தனிக்கென்று தனிபாணியை உருவாக்கி அசுர வெற்றி பெற்றவர்.இவரது படைப்பில் உருவான பாகுபலி மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறது. இப்படத்தில் பழங்குடியின மக்களின் தெய்வமாக போற்றப்படும் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பது போன்ற […]
பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது கடந்த ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் பறந்தது. இது நேர்மையான செயல் முறையல்ல என்றும் இவ்வாறு ஒரு வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான […]
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் […]
கேன் குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியது. இதையடுத்து நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப, ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு என சென்னை உயர் நீதிமன்றம் […]
காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு. காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 காதலர் தினம்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கடையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் […]
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் முக்கிய நபராக கருதப்பட்ட ராணுவ […]