வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு […]
தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் 600 க்கும் மேற்பட்ட ரஷ்ய போர்க்குற்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அவர்களில் 80 பேர் மீது வழக்குத் தொடரத் தொடங்கியுள்ளதாக கிய்வின் உயர்மட்ட வழக்கறிஞர் செவ்வாயன்று தெரிவித்தார். சந்தேக நபர்களின் பட்டியலில் “ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சார முகவர்கள்” உள்ளடங்குகின்றனர் என்று, வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா ஹேக்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். எஸ்தோனியா, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை உக்ரைனில் உள்ள சர்வதேச விசாரணைக் குழுவில் சேர முடிவு […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்துமாறு பிற நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா மீது பிற நாடுகள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பல வழிகளில் தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் தொடர்ந்து போர் நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 500 பீரங்கிகள், 82 போர் விமானங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தங்கள் இழந்துள்ளதாகவும் ரஷ்யா சார்பில் கூறப்படுகிறது. தற்பொழுதும் கடலில் மூழ்கியுள்ள ரஷ்யாவின் இந்த பிரமாண்டமான போர்க்கப்பல் குறித்து உக்ரைன் தரப்பில் கூறும்போது, தங்கள் ஏவுகணை […]
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் போர் நிலவி வரும் நிலையில், போலந்தில் உள்ள வார்சாவில் தற்பொழுது தூதரகங்கள் செயல் பட்டு வருகிறது. முன்னதாக இந்திய தூதராக பார்த்த சாத்பதி பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹர்ஷ் குமார் ஜெயின் அவர்கள் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் தூதரகம் செயல்பட்டு வரும் வர்ஷாவுக்கு புதிய தூதர் ஜெயின் அவர்கள் சென்றுள்ளார். அவரை தூதரக பொறுப்பாளர் அம்பரீஷ் வெமுரி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் […]
வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், […]
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், […]
ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு […]
போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை ஆர்மீனியா குறிவைத்து தாக்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது. நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் […]
அர்மீனியா – அசர்பைஜான் இடையிலான மோதல் போராக மாறிய நிலையில், அது 6 ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் நகோர்னோ – கராபக்கின் பெரும்பாலான பகுதிகளை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் […]
அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளிடையே நான்காம் நாளாக கடும் போர் நிலவி வருகிறது. இந்த போரில் அர்மீனியா நாட்டின் 2,300 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகள், ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாக இருந்து வந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைக்கப்பட்டநிலையில், அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள், தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. இதில் அர்மீனியா நாட்டில் கிறிஸ்தவ மக்களும், அசர்பைஜா நாட்டில் இஸ்லாமிய மதத்தினர் பூர்விகமாக கொண்டனர். இந்த […]
அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுக போரை துவக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது. சீன துாதரக அலுவலகங்களை எல்லாம் மூடுமாறு அமெரிக்கா முடுக்கி விட்டதை அடுத்து பதிலடி கொடுக்க நடவடிக்கையில் சீனாவும் இறங்கி உள்ளது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை உலகிற்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டதாகவும் அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பிடியில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது என்று […]
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர் இன்னும் நின்றபாடில்லை. ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று காலை 7 45 மணி அளவில் எல்லை பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் செலின் மோட்டார்ஸ் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறி உள்ளது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறது. இது போன்றே கடந்த வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் […]
இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்துள்ளது.அடுத்தாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இதனால் அந்நாட்டில் போராட்டம் . கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல் விலையானது குறைந்தபட்சமாக 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையினால் இரான் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் கிடங்குகலில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் மோசமாக மாறிவிட்டது என கூறுகின்றன.நெடுஞ்சாலையில் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த சூப்பர் 30 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர பெற்றது. இப்படத்தை அடுத்து ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியான திரைப்படம் வார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என டப் செய்யப்பட்டு ரிலீசானது. ரிலீஸ் […]
பாலிவுட் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான சூப்பர் 30 திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகளின் நன்மதிப்பைப் பெற்று கேளிக்கை வரிவிலக்கும் பெற்றது. இந்த படத்தை அடுத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களம் நிறைந்த ஒரு படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்து உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்னொரு பாலிவுட் முன்னணி நடிகரான டைகர் ஷெராப் இப்படத்தில் ஹிர்த்திக் […]
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போருக்கு தீர்வு காண நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்போது கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த தலிபான்களின் ஆட்சியை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மொத்த நாட்டின் எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும் […]
வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று முடிவுறும் வேளையில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையானது “சபை முடியும் வேளையில் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் ” என்பதே ஆகும் . எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் […]