டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். புதிய திருத்தத்தின் கீழ் வக்பு வாரியத்தில் பரந்த பிரதிநிதித்துவம் இருக்கும். வாரியத்தில் பெண்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருப்பார்கள். இப்போது ஷியா, சன்னி, போஹ்ரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் ஆகியோரும் வக்பு வாரியத்தில் இருப்பார்கள். வக்பு திருத்த மசோதா 2025 உடன் வக்பு (ரத்து) மசோதா 2024-வையும் […]