சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புவதோடு, மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் தவெகவினர் […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில், ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில், இன்று சென்னை […]
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்த நிலையில், இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்டந்தோறும் நாளை (ஏப்ரல் 4, 2025) ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு தவெக தலைமை உத்தரவிட்டு […]