விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றினர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிம்மாச்சலத்தில் நேற்று பெய்த கனமழையால் இந்த விபத்து […]
கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம். உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.