Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவித்து, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கும் அழியாத “மை” தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. மறுபக்கம், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் […]
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்.பி. மாலோத் கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (TRS) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பாக அம்மாநிலத்தில் மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு மாலோத் கவிதா வெற்றி பெற்றார். இதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மாலோத் கவிதா (Kavitha Maloth) மற்றும் அவரது உதவியாளர் […]
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், வாக்காளர்கள் தங்களது பெயர் (அல்லது) முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துக்கொள்ளலாம். அந்த வகையில், சென்னையில் மட்டும் 902 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது பிழைகளை திருத்தம் […]
அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தில் 29லட்சத்து 50ஆயிரம் 633 பேர் பெயர் மற்றும் முகவரி சரி பார்த்துள்ளனர். 1லட்சத்து 65 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் திருத்தம் செய்ய வருகிற 15 […]
இன்று ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. “ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம்’ என வாக்காளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். ஒருவேளை “தேர்தல் விதிகளை எங்களால் முடிந்த அளவு மீறுவோம்” […]
தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.