டெல்லி : ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்தியாவின் அகிம்சை பாதையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ராஜதந்திர செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாயவை முன்னிலைப்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி தற்போது வரையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இரு நாட்டுக்கும் ஆதரவு என்ற சமநிலையில் உள்ளது. […]
டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்யா – உக்ரைன் […]
டெல்லி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்து வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு அடுத்து வரும் வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்க்கு செல்ல உள்ளார். முன்னதாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி […]
உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கீவ் நகரில் உள்ள […]
கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ […]
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மோதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்து வருவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க-ரஷ்யா உறவுநிலை வலுவிழந்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே மோதலுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக அன்டோனோவ் கூறியதாக ரஷ்ய செய்தித்தொடர்பு நிறுவனமான TASS தகவல் தெரிவித்துள்ளது. […]
உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது. ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே […]
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை மருத்துவரால் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை” என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்,என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .ரஷ்யாவிடம் இருந்து […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகளை வைரஸ் சுமக்கப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில்,எந்தவொரு இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்களும் தங்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதில் அளித்துள்ளார். மேலும்,இது […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா,இன்று 9-வது நாளாக தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.எனினும்,கார்கிவ் நகரை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள […]
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, ஐரோப்பா கூட்டமைப்பு சட்டங்களை மீறி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் குண்டு வீசி தாக்குவதாகவும், மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்லை. வேறு சிலருக்கு இந்த நாள் தான் வாழ்வின் கடைசி நாள். தாய்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருக்கும் உக்ரைன் குடிமக்களை பற்றி […]
உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையி, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மீதும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ஜானாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் […]