ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85,000 மக்கள் வசிக்கின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு […]
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலையில், பீட்சா தயாரிக்கும் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா. மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலை அவ்வப்போது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. இதனையடுத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மலையின் உச்சிப் பகுதியிலிருந்து அடிவாரத்துக்கு வழிந்து வருகின்ற தீப்பிழம்புகளில் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா சமையல் அறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்தி வருகிறார். 100 டிகிரி […]
நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலன்டா என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியும், சாகசத்தின் போது பாடல்களை பாடி கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் அவர் நடந்து சென்றுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசம், அமெரிக்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இவர் ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி, டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அப்போது எரிமலை வெடிப்பில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கினர். பின்னர் மீட்பு பணிகள் தீவிரடைந்தது. எரிமலை வெடிப்பில் சிக்கி […]
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான். ஸ்ட்ரோம்போலி தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி […]
அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் இருக்கும் பயங்கரமான எரிமலைகளில் ஒன்று, சிலுவா எரிமலை. இந்த எரிமலையை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருவது வழக்கம். அப்படி அந்த எரிமலையை சுற்றி பார்க்க வந்த 32 வயதுடைய நபர், அந்த எரிமலையை அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது கால் இடறி உள்ளே விழுந்துவிட்டார், உடனே தகவல் அவசர உதவிக்கு தெரியப்படுத்த அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். உடனே செங்குத்தான எரிமலையில் தவறி விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனையில் […]