அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு. அரசுப்பள்ளிகளில் 9,10-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 11, 12-ம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் […]
தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் முதலமைச்சரிடம் சமர்பிக்கிறார். தமிழகத்தில் பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க […]