ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியானது வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆம்பன் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 20 ஆம் தேதியன்று மேற்கு […]
தூத்துக்குடி : வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து 1000 சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய கப்பல் சேவையை துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் துவக்கி வைத்தார். பின்பு தூத்துக்குடி, இராமேஷ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே நீர்வழி பாதையில் பயணிகள் படகு போக்குவரத்து திட்டம் துவங்கப்படவுள்ளது என துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.