AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]
கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த சேனலில் வெளியான […]
இஸ்ரேல் மீது பாலத்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தற்போது வரை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு […]
உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு. உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதற்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். கடந்த 23-ம் […]
ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட அதிரடியாக ஆணையிட்டுள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை […]
ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், தனது பொறுப்பை அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரின் சமூகவலைத்தள தகவலை சுட்டிக்காட்டி அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் இதழ், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் […]
ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அதிபர் புடின் பெருமிதம். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார். […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக […]
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய […]
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை […]
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. […]
எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அரசின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மீதுள்ள பழைய புகார்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி ரஷியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஷியா நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபெக்கா ரோஸ் தெரிவித்திருந்தார். […]
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற முடிவு செய்கிறார் விளாடிமிர் புடின். கொரோனா வைரஸுக்கு எதிரான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெறுவார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனலிடம் தெரிவித்தார். ரஷ்யா தயாரித்த “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசி டிசம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யா தன்னார்வ தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய சுகாதார அமைச்சகம் ஒரு தனி சோதனைக்குப் பிறகு வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி […]
அர்மீனியா – அஜர்பைஜான் இடையே நடந்த மோதலில் 4000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. இந்தநிலையில், நகோர்னோ-கராபத் […]
இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறுகிறார். இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார். எபிவாகொரோனா என்ற தடுப்பூசி நோவஸிபிர்ஸ்கில் உள்ள வெக்டர் மாநில ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்யப்பட்டதாக புடின் கூறினார். இந்நிலையில், ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்கான இரண்டாவது ரஷ்ய தடுப்பூசி வெக்டர் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது. சுமாக்கோவ் மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது […]
ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.எனவே டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி […]
ஐக்கிய நாடுகளின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் திறனைப் பாராட்டினார். மேலும் அவர் […]
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார். ரஷிய வெக்டர் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி “எபிவாகொரோனா” தடுப்பூசி அக்டோபர் 15 -க்குள் பதிவு செய்யப்படும் என்று கூறியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் […]