எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது என சசிகலா அறிக்கை. தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தை அணிவித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விகே சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம்பெற போராடியவர். தமிழக […]
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என சசிகளை அறிக்கை. ஆயுதபூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னை அம்பிகையின் அருள் பெற நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் […]
அதிமுக நிச்சயம் ஒன்றாக இணைந்து வெற்றிபெறும் என தஞ்சையில் சசிகலா பேட்டி. பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அருளானந்த நகரிலுள்ள இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் கொள்கையை வாயளவில் பேசிக்கொண்டு இருக்காமல், செயல்படுத்தி காட்டியவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அண்ணா, புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் வழியில் நாங்கள் சென்று கொண்டியிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக […]
நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அதேபோல் ஆட்சி செய்வேன் என சசிகலா பேச்சு. சமீப காலமாக வி.கே. சசிகலா கடந்த ஆன்மீகப் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய சசிகலா, தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வப்போது சசிகலாவின் ஆன்மிக பயணம் ஒரு அரசியல் பயணமாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]
வி.கே சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும், தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்கு முக்காட செய்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் எனது […]
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதே தொண்டர்கள் எனக்கு தரும் பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று வி.கே.சசிகலா வேண்டுகோள். ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாளைய தினம் வி.கே.சசிகலாவின் 67ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சசிகலா வீடியோ காட்சி மூலம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சசிகலா, என்னை வந்து நேரில் சந்திப்பதற்கு கடிதங்கள் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதாலும், பொது முடக்கம் […]