நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். […]