கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று முன்தினம் (மே 30) 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்திருந்த பிரதமர் மோடி அன்றைய தினம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அன்று மாலை கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சிறப்பு படகு மூலம் சென்ற பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தனது 45 மணிநேர தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள், […]
அண்ணாமலை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 1 ( இன்று) காலை திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது குறித்தும், பிரதமர் மோடி தியானம் செய்ய கன்னியாக்குமரிக்கு சென்றது பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பாஜக […]
கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, […]
தேர்தல் விதிமுறைகள்: இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு வாக்குப்பதிவு சமயத்தில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வானது தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். இன்று மாலை 5.30 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் வரையில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் தியான நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. […]
இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் […]