ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கைப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.!
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அதன்படி, ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவித்திருந்து தமிழக அரசு. […]