வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று இருந்த வேலூர் மாவட்ட ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகி விட்டல்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டல்குமார் உயிரிழப்பு கொலை என்றும் இதற்கு வேலூர் மாவட்டம் நாகல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர் தான் காரணம் என்றும் பாஜகவினர் வேலூர் அரசு மருத்துவமனையில் தொடர் […]