எத்திரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவரும்,இளம் தொழிலதிபருமான விடாலிக் புட்டரின் என்பவர் இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8,800 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.இதன்காரணமாக, நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான கொரோனா தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் உபகரணங்கள் போன்ற உதவிகள் […]