புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு விமானங்களின் பட்டியல் UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்) UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் […]
இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை […]
அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஹாங்காங் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங்கிற்கு செல்ல அரசாங்கம் தடைசெய்வது இது மூன்றாவது முறையாகும். முந்தைய தடைகள் […]
விஸ்டாரா இன்று டெல்லி-லண்டன் இடையே விமானங்களின் எண்ணிக்கையை நவம்பர் 21 முதல் அதிகரிக்கும் என்று விஸ்டாரா கூறியுள்ளது. விஸ்டாரா ஒரு அறிக்கையில், வாரத்திற்கு நான்கு விமானங்களுக்கு பதிலாக நவம்பர் 21முதல் டெல்லி-லண்டன் பாதையில் வாரத்திற்கு ஐந்து விமானங்களை இயக்கும் என்றும் டிசம்பர் 1 முதல் டெல்லி மற்றும் லண்டன் இடையே தினசரி விமானத்தை இயக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான சேவையான விஸ்டாரா தனது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய விமான சேவையான விஸ்டார முதன் முதலில் திட்டமிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தில் வைஃபை இணைய இணைப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை, தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் என்ற விமானத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவையை அனைத்து விஸ்டாரா வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவசமாக வழங்குவதாக […]
தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்திற்கு உள்ளே சிகரெட்டை புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த ஒரு பயணி இறக்கி விடப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த விஸ்டாரா யு.கே.707 என்ற பயணிகள் விமானம் அப்போது அந்த விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றார். ஆனால் உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் சிகரெட் புகைக்க பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆனாலும் அடம்பிடித்த […]