பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 111 மாவட்டங்கள் இடம் பெற்ற இந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டத்திற்கு தான் முதல் இடம். இந்தியாவில் கல்வி, விவசாயம், நீர் நிலைகள், ஆரோக்கியம், நிதி சேர்த்தல், திறன் வளர்ச்சி, அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் மாவட்டங்களின் பட்டியலை ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து சாதனை […]
அரசின் ரத்த வங்கிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் ரத்தம் செலுத்திய விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது .தற்போது அந்த பெண்மணி மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து , எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு , ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி…. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் காக்கிவாடன்பட்டி என்ற கிராமத்திற்க்கு அருகே செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்து உராய்வு காரணமாக திடீர் என தீ பற்றியது. இதையடுத்து, விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவ்விபத்தில் காயமடைந்த இருவரை […]
விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. குப்பாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு புதுமை பள்ளிக்கான விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பு 70 ஆயிரம் […]