விருதுநகர் மாவட்டம் ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலை உள்ளது. இது நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது, லிங்கா புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராம குருநாதன் இந்த விபத்தில் சிக்கி 70 சதவீத தீக்காயம் அடைந்தார். இந்த நிலையில் இதையடுத்து குருநாதனை […]
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிக்சை பெற்ற தேவி என்ற பெண் உயிரிழந்ததால் அவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நோக்கி சென்ற அரசு பேருந்து விருதுநகரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த சொகுசு காரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நவீன் குமார் என்பவர் […]
உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.இந்த மாரத்தான் போட்டியானது சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் தொடங்கி சிவகாசி நகரின் பிரதான வீதிகளின் வழியே சென்று JCI மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர் பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த கோகுல் என்ற மாணவனும் , மாணவியர் பிரிவில் சந்தியா என்ற மாணவியும் முதலிடத்தை பிடித்தனர். இதைப்போல் கல்லூரி மாணவர்களின் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமாரும், மாணவியர் பிரிவில் […]
ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரம் வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருபவர் சவுரி ராஜன்.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.செல்போன் ஆர்டர் செய்ததில் சவுரி ராஜனுக்கு ஓர் பழைய கடிகாரம் , ஒரு சார்ஜர், ஓர் அடாப்டர் ஆகியவை வந்துள்ளது.செல்போன் ஆர்டர் செய்ததில் பழைய கடிகாரம் வந்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விருதுநகரில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ், வரும் ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆருக்கு திருவுருவ சிலை திறக்கப்படும் […]
தமிழகத்தின் இரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் இருந்த இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , கர்ப்பிணிப் பெண்ணுக்கு HIV இரத்தம் செலுத்தப்பட்டது உள்நோக்கத்துடன் செலுத்தப்பட்டது இல்லை என்றாலும் நிறுவகத்தின் கவனக்குறைவால் இன்று ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை […]
ராஜபாளையத்தில் வீட்டில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானை நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு காணிக்கையாகச் செலுத்துவதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு பெண் யானையை விலைக்கு வாங்கி வந்துள்ளார். அப்போது கர்நாடக வனத்துறையினர் இந்த யானையை விற்கவோ பிற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில் யானையை பராமரிக்க முடியவில்லை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த முகமதுயூசூப் […]
விருதுநகர் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையபட்டி பகுதி வைப்பாற்றில் அனுமதியின்றி அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரி, 2 டிப்பர் மற்றும் ஜேசிபி வண்டிய பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட வேல்முருகன், அய்யனார், திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை […]
விருதுநகர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சத்ரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தர்ஷினி, ரூபாஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முத்துலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜாவுக்கு தெரியவந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த […]
ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியார்களிடம் கூறியதாவது: பட்டாசு ஆலை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்கவும், தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி தீர்வு காணும். பசுமை பட்டாசு குறித்து முதல்வரை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்படும்.ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்; அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை […]
எடப்பாடி அரசை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 5 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான […]
அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன் என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள். ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை […]