சென்னை : நேற்று (டிசம்பர் 15) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், அவர் அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு […]