கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தின் லைவ் சாட் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து ரசிகர்களுடன் உரையாடி வரும் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.அதில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார் அப்போது நான் பந்துவீசும் போது விரேந்திர சேவாக்குக்கு பந்து வீச நான் மிகவும் பயந்துள்ளேன். விரேந்திர சேவாக் எப்போது எப்படி பந்தை பறக்க விடுவார் என தெரியாது என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் தான் சோயப் அக்தர் பந்துவீச்சுக்கு பயப்படுவேன் […]
அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக தேர்வாகி இருக்கும் யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் இரு போட்டிகளில் வெற்றிபெற்றுக் கொடுத்தாலே அவர்கள் மீது போடப்பட்ட முதலீட்டை திருப்பி எடுத்துவிடுவோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். 11-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரு நகரில் நடந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் மேட்ச் வின்னராக ஜொலித்த மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில், […]
இந்தாண்டு ஐபிஎல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் சென்னை அணியின் கூல் கேப்டனாக மஹிந்திரசிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் வருடாவருடம் சென்னை அணிக்காக களமிறங்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தாலும் பஞ்சாப் அணி அவரை 7 கோடிக்கு மேல் தொகை கொடுத்து எடுத்து உள்ளது. அந்த அணியில் ஏற்கனவே இருந்த அக்சர் படேல் மட்டும் தக்கவைக்கபட்டு மற்ற வீரர்கள் ஏலத்தில் கழட்டி விடப்பட்டனர். பின்னர் அஸ்வின், […]
ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியில், வீரேந்திர சேவாக் தலைமையிலான அணியை சாஹித் அப்ரிடி அணி வீழ்த்தியது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற இரண்டாவது டி20 போட்டி, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள உறைந்த ஏரியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சேவாக் 46 ரன்களும், சைமண்ட்ஸ் 67 ரன்களும் சேர்த்தனர். பின்னர் விளையாடிய ராயல்ஸ் அணியில், ஜாக் காலிஸ் 37 […]
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அணியிலும் இரண்டு மூன்று வீரர்கள் கேப்டனின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பார்கள் […]