இனி நீதிமன்றம் போகத் தேவையில்லை.! ஆன்லைனில் செலுத்தலாம்.! இன்று முதல் தொடக்கம்.!
சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். வேகமாக செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, சிக்னலை மீறுவது போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று விதி மீறலில் ஈடுபடுவோர் இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ள முறைப்படி செலுத்தலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் சென்று கூட செலுத்தலாம். இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் […]