டெல்லி : போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தகர்த்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனை பொய்யாக்கும் வண்ணம் பாஜக […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை […]
ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணிமணி நிலவரப்படி, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக கட்சியும், 35 இடங்களில் காங்கிரஸஸும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. இதில், […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியான்வில் இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, 90 தொகுதிகளில் 57 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை […]
டெல்லி : சர்வதேச ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானவை சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா (Julana) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்குகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் […]
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர். வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது […]
டெல்லி : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் […]
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் […]
டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வினேஷ் போகத் தகுதி நீக்கம் ..! பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் இந்த ஆண்டு கோலாகலமாக ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வந்தது. இதில் 50.கி […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடினார். மேலும், முதல் சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். கடைசி நேரத்தில் இறுதி போட்டிக்கு முன் உடல் பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கமாவது கிடைக்குமென ஒட்டுமொத்த […]
பாரிஸ் : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்த கருத்துக்கள் இன்னும் பலமாக விளையாட்டு மற்றும் பொது அரங்குகளில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி என்று இருந்த நிலையில் 100 கிராம் எடை அனைத்து இந்தியர்களின் கனவையும் பொய்யாக்கிவிட்டது. 50 கிலோ மல்யுத்த போட்டி எடைப்பிரிவில் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த வினேஷை ஒலிம்பிக் கமிட்டி […]
பாரிஸ் : பாரிஸில் ஒலிம்பிக் 33=வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நாள் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாகவே மாறி உள்ளது என கூறலாம். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வதை கனவாக வைத்து பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். அதே போல ஒலிம்பிக் தொடரில் நடத்த படும் மகளீருக்கான 50கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்து, […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளீருக்கான 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் விளையாடி வந்தார். இதில், நேற்றிரவு நடைபெற்ற 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அதை தொடர்ந்து […]
சென்னை : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்காக 4-வது தங்கம் உறுதியாக கிடைக்கும் என நேற்றைய நாள் முதலே எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பொழுதில் இறுதி போட்டிக்கு முன் உடல் தகுதியில் 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தால் வினேஷ் போகத்தை சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயங்களும் நொறுங்கி போனதென்றே கூறலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் பல கட்சி […]
டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் தனது எடையை குறைப்பதற்காக நேற்றைய நாள் இரவு முழுவதும் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாக […]
பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது. 50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட […]
பாரிஸ் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் தொடரான ஒலிம்பிக் தொடரானது தற்போது பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கி எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் நேற்று 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த வீராங்கணையான யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் […]
பாரிஸ் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட […]