சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக செப்டம்பர் மாதம் மாநாடு என செய்திகள் வெளியான நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தாமதமாவே, இறுதியாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் […]