Tag: Villupuram district rain

விழுப்புரம் மாவட்டத்தில் மழை..!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைபெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. உளுந்தூர்ப்பேட்டை, எலவனாசூர் கோட்டை, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Villupuram district rain 2 Min Read
Default Image