விழுப்புரம் : தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் […]
தமிழகம்:கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, […]