திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக, ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, அளவுக்கு […]