தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி கிராம சபை […]
கொரோனா பரவல் காரணமாக வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு […]
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்துள்ளோம். இதுபோன்று தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர் என கூறினார். ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக […]
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சிந்துஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டார். மேலும், ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு, […]
மஹாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, நேற்று தமிழக அரசு சார்பில் கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியாவின் இதயம் கிராமங்களில் வாழ்கிறது என்று சொன்ன காந்தியடிகளின் பிறந்தநாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக […]