நாளை கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு உத்தரவு

குடியரசு தினமான நாளை கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம், இந்தாண்டு அதாவது, குடியரசு தினமான நாளை நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு … Read more

போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் – முக ஸ்டாலின்

போராட்டத்தை போலீசார் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர் என்று மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கிராம … Read more

நீங்கள் வேலுமணி அனுப்பிய ஆள், வெளிய போங்க – கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு.!

திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஒரு பெண்ணின் கேள்வியால் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? … Read more

“தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள்”- மு.க.ஸ்டாலின்

தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள் கோவை மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதி-தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முக ஸ்டாலின், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள். 4 மாதங்களுக்குள் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என நினைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். திமுக மீது பயம் உள்ளது. அந்த பயம் … Read more

தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர்., அதற்கு இதுவே சாட்சி – முக ஸ்டாலின் பேச்சு

அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர் என கிராம சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேச்சு. வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது … Read more

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல நாங்கள் – முக ஸ்டாலின் ஆவேசம்

திமுக-வின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும். இது உறுதி என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த உள்ளதாக திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் முக ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, திமுகவின் ‘கிராம சபை’ … Read more

குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் – முக ஸ்டாலின்

குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் என்று குடும்பக்கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். திமுக கட்சியின் மீது பல ஆண்டுகளாக வைக்கப்படும் விமர்சனம் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. அதன்படி, மறைந்த கலைஞர் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இளைஞர் அணி பொறுப்பு வழக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டிவனம் தொகுதி-மரக்காணம் பேரூராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் மக்கள் வார்டு சபைக் … Read more

அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் – வைகோ கண்டனம்

கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கூறுகையில், திமுக முன்னின்று நடத்தும், கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கிராம சபை கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் எனவும் தெரிவித்துள்ளார். … Read more

#BREAKING: கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு

அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் நிர்வாக அமைப்பாகும். இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மக்களை … Read more