தர்ம யுத்தத்தின்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தற்போது தனது விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதிமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்த இவர் தற்போது விலகி புதிய கலகத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தர்மத்தை தொடங்கியபோது ஆதரவு அளித்தவர் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன். இவர் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அதிமுக இடம் வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் […]